மூத்த படைப்பாளி தெளிவத்தை ஜோசப் காலமானார்

Admin
Oct 21,2022

மலையகம் என்னும் உணர்வுக்கு தனது எழுத்தாற்றலால் உருவம் கொடுத்த மூத்த படைப்பாளி தெளிவத்தை ஜோசப் தனது 88 ஆவது வயதில் கடந்த இன்று காலமானார்.

மலையக இலக்கியத்தின் அடையாளத்திற்கும் தனித்துவத்திற்கும் இவரது எழுத்துக்களும் தொகுப்புகளும் ஆய்வுப் பணிகளும் பெரும்பங்காற்றியுள்ளன.மலையகத் தோட்டப்புற வாழ்வியலின் அழகியலைச் சிறுகதைகளாக வடித்து,அந்த வாழ்வியல் அனுபவங்களைத் தனது படைப்புகள் மூலம் கொண்டு வந்து பிரதேசம் கடந்தும் சிறந்த படைப்பாளியாகக் கருதப்பட்ட ஒரு படைப்பாளி தெளிவத்தை ஜோசப்.மலையகத்தின் வற்றாத இலக்கிய பிரவாகமாக பரிணமித்த இவர், தனது
இலக்கியப் பயணத்தில் 66 சிறுகதைகள் உட்பட ஏராளமான படைப்புகளை வழங்கியுள்ளார்.