துபாய், ஓமான் நாடுகளுக்கு கடத்தப்படும் இலங்கையர்கள்

Admin
Oct 21,2022

துபாய் மற்றும் ஓமான் நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் நபர்களை அழைத்துச் சென்று காணாமலாக்கும் ஆட்கடத்தல்காரர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார.

குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து இலங்கையர்களை கடத்தும் ஆட்கடத்தல்காரர்கள் தொடர்பில் விசாரணை செய்து வருவதாக  அவர் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்பும் போது அவர்களுக்கு பயிற்சி திட்டங்களை வழங்குவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.