'காகத்தை காப்பாற்ற வந்த அண்டங் காகமும் இல்லாமல் போய் விட்டது'; ஸ்ரீதரன் சாடல்

Admin
Oct 20,2022

அடிக்கடி திருத்தங்களை கொண்டு வருகிறீர்கள்.இதனால் எப்போதும் நாட்டின் பிரச்சினை தீராது.திருத்தங்கள் நீங்கள் கொண்டு வருவதே உங்களுடைய பங்காளிகளை காப்பற்றுவதற்கே.இதே போன்று செயற்பாடு தான் மாறி மாறி அமைச்சர்களை கொண்டு வந்தீர்கள்.இன்று என்ன நடந்தது.காகத்தை காப்பாற்ற வந்த அண்டங் காகமும் இல்லாமல் போய் விட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.

இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் கீழே போய்விட்டது என்று சொல்லிக் கொள்கிறீர்கள்.மலையக மக்களுக்கு போதிய அளவு சம்பளமும் ,அவர்கள் வாழ்வதற்கு காணிகளையும் கொடுத்துப் பாருங்கள்.இந்த நாட்டின் பாதி பொருளாதாரத்தை அவர்கள் தாங்கி ,பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவார்கள்.

திருத்தங்கள் தேவையில்லை.மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயற்படுவதே நாட்டை உயர்த்தும்.இல்லையென்றால் நீங்கள் நினைத்ததை செய்து முடியுங்கள்.சிங்கள மக்கள் இல்லாத யாழ்ப்பாணத்தில் விகாரைகளை கட்டுகிறீர்கள்.குருந்தூர் மலை,வெடுக்கு நாறி மலையில் புத்தரை அமர்த்துகிறீர்கள்.அன்று காமினி திசாநாயக்க காலத்தில் அழிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகம் முதல் தற்போது உள்ள சிங்களத் தலைவர்கள் இனவாதத்தை கக்கி நாட்டை நாசமாக்குகிறார்கள் என்றார்.