அமெரிக்க இராஜதந்திரி இன்று இலங்கைக்கு வருகிறார்

Admin
Oct 19,2022

தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று (19) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இதனை அறிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காகவே டொனால்ட் லூ இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்