திடீரென இலங்கைக்கு வரும் சீன கப்பல்

Admin
Oct 18,2022

சீனக் கப்பலொன்று நாளை அல்லது நாளை மறுதினம் இலங்கைக்கு வரவுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்து மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இடிபாடுகளை மீட்பதற்காக இந்தக் கப்பல் நாட்டிற்கு வரவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

இடிபாடுகள் அகற்றப்படும் வரை இந்தக் கப்பல் இலங்கைப் பெருங்கடலில் பல மாதங்கள் இருக்கும் என்றும் அதன் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.