வடக்கில் சீன இராணுவ பிரசன்னம் அதிகரிப்பு

Admin
Oct 18,2022

இலங்கையில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து தமிழகம் தீவிர பாதுகாப்புக் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் சீனர்களின் செயல்பாடுகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் இருப்பதாகவும், கடற்கரையோரங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அரச புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு இலங்கையில் மக்கள் விடுதலை இராணுவ பணியாளர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் வடக்கில் கடலட்டை பண்ணையை ஆரம்பிப்பதற்கு அதிநவீன கருவிகளை சீனா பயன்படுத்தியதாகவும் புலனாய்வு அமைப்பு ஆதாரங்களை மேற்கோள் காட்டி எச்சரித்துள்ளது.