பிரதமராகுவாரா பசில்?

Admin
Oct 18,2022

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் இதுவரை கலந்துரையாடப்படவில்லை என ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (18) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“வெளிநாட்டில் இருக்கும் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பிய பின்னர் பிரதமர் பதவியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளதா?” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

“பசில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் இதுவரை கலந்துரையாடப்படவில்லை. அமைச்சரவையில் இதுபோன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.