இலங்கை இராணுவத்தில் உள்ள 58 பேரை கைது செய்ய சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை

Admin
Aug 06,2022

இலங்கையின் 58 இராணுவ அதிகாரிகளை கைது செய்வதற்கு சர்வதேச நீதி அமைப்பை பயன்படுத்துமாறு 47 நாடுகளின் ஜனாதிபதிகளை ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்செலெட் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகங்கள் வெளியிட்ட செவ்வியில் இவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த இராணுவ வீரர்களுக்கு எதிராக இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். முதன்முறையாக, சர்வதேச நீதி அமைப்பை அமல்படுத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

இதனால், இந்த நாட்டின் இராணுவ வீரர்கள் இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகளைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.