தென்னிலங்கையர்களால் தயாரிக்கப்பட்ட விஷேட அறிக்கை

Admin
Oct 15,2022

2015ம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்ரமசிங்கவும் ஆட்சியமைத்து தம்மைத்தாமே நல்லாட்சி என்று கூறிக்கொண்டு இன்னப்பிரச்சனை என்ற சொல்லாடலை நல்லிணக்கமாக மாற்றினார்கள் என சிரேஷ்ட ஊடகவியலாளர் நிக்சன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், வடக்கு கிழக்கு விவகாரம் என்பதை கிழக்கை விடுத்து வடமாகாண விவகாரமாக மாற்றினார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, பயங்கரவாத தடை சட்டத்தால் உண்மையில் பாதிக்கப்பட்டது தமிழர்கள் எனவும் இன்னும் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் ஆனால் அது பற்றி எல்லாம் பேசப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.