புலம்பெயர் தமிழர்களை சந்திக்கவிருக்கும் ரணில்; ஏன் தெரியுமா?

Admin
Oct 15,2022

எந்தவொரு சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கும் பதிலாக உள்நாட்டு பொறிமுறை தொடர்பாக தமிழ் புலம்பெயர் தலைவர்களுடன் கலந்துரையாடுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

நீதி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இதனை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக விரைவில் புலம்பெயர்ந்த தமிழ் தலைவர்களுடன் இலங்கை ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த விவாதம் வெற்றியடையும் பட்சத்தில், உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் விஜயதாச கூறினார்.