லொட்டரி விசாவில் மோசடி: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்

Admin
Oct 15,2022

அமெரிக்காவிற்கு பயணிக்க மோசடி செய்பவர்களால் விளம்பரப்படுத்தப்படும் பயண காப்பீட்டு சான்றிதழ்கள் தேவையில்லை என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

எனவே பயணிகள் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை விசா கட்டணங்கள் உத்தியோகபூர்வ வங்கிகள் அல்லது அமெரிக்க தூதரகத்தின் தூதரக காசாளருக்கு மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவுக்குச் செல்வதற்கான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெறுவதற்காக மோசடிகள் இடமபெறுவதை சுட்டிக்காட்டி அமெரிக்க தூதரகம் இதனை குறிப்பிட்டுள்ளது.

மேலும் டி.வி.லொட்டரி மோசடிகளும் அதிகளவில் நடக்கின்றன என குறிப்பிட்டுள்ள அமெரிக்க தூதரகம் வீசா தகவல்களை http://ustraveldocs.com/lk இலிருந்து பெறலாம் என அறிவித்துள்ளது.