மீண்டும் பிரதமராகும் மஹிந்த?

Admin
Oct 14,2022

மக்கள் ஒருபோதும் மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு செல்லுமாறு போராட்டம் நடத்தவில்லை என்றும் அவர் மீண்டும் பிரதமராகலாம் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தெரிவித்தார்.

பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டடத் தொகுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களின் எதிர்ப்பினால் சற்று விலகி இருக்கின்றாரே தவிர அவரை வீட்டுக்கு போகுமாறு மக்கள் பணிக்கவில்லை. அவ்வாறான நிலையில் அவர் மீண்டும் பிரதமராக வருவதில் எந்த பிரச்சினையும் கிடையாது.

நாடாளுமன்றத்தில் உரிய முறையில் தெரிவு இடம்பெறும் போது மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக வரக்கூடிய சாத்தியகூறு காணப்படுகிறது. எனினும் தற்போதுள்ள பிரதமருக்கு நாங்கள் முழுமையான ஆதரவினை வழங்கி வருகின்றோம் என்றார்.