சிறப்புக்-கட்டுரைகள்
தமிழ் பத்திரிகைகள்
சினிமா செய்திகள்
திரைப்படங்கள் & TV நிகழ்ச்சிகள்
நவாலி அட்டகிரி பகுதியில் 111 கைக்குண்டுகள் மீட்பு
Admin
Oct 14,2022
மானிப்பாய் பொலிஸ் பிரிவில் உட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து 111 கைக்குண்டுகள் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 11.10.2022 செவ்வாய்க்கிழமை குறித்த காணியில் விவசாயம் செய்வதற்காக உழவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது உழவு இயந்திரத்தின் கலப்பையில் இரண்டு பைகள் சிக்கின. அந்த பையில் கைகுண்டுகள் இருப்பது அவதானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டனர்.
அந்த வகையில் இன்றைய தினம் குறித்த பகுதிக்கு வருகை தந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 111 கைகொண்டுகளை மீட்டனர்.
மீட்கப்பட்ட கைக்குண்டுகள் கல்லுண்டாய் வெளிப்பகுதியில் செயலிழக்கப் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.