"அலி சப்ரி கூலிக்கு மாறடிக்கும் ஒரு கை கூலி"- மனோ சாடல்

Admin
Oct 12,2022

சர்வதேச விசாரணை வேண்டாம் உள்நாட்டு விசாரணையே போதும் சர்வதேச விசாரணை, தலையீடுகளை உள்நாட்டுக்குள் அனுமதிக்கப்போவாதில்லை என்று உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் கூவி வரும் அலி சப்ரி கூலிக்கு மாறடிக்கும் ஒரு கை கூலி என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சாடியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்து வந்த கோட்டா அரசிலும் சரி,தற்போதைய ரணில் அரசிலும் சரி எந்த ஒரு வெங்காயத்தையும் உறிக்கவில்லை எனவே தான் வெளிநாட்டு விசாரனையை நாம் நாடி செல்கின்றோம்.

தமிழர்களின் வேதனையை, சுமைகளை, இழந்த இழப்புகளை, பத்து வருடங்களுக்கு மேலாகியும் எந்த ஒரு தீர்வையும் முன் வைக்காத இந்த அரசாங்கத்திடம் எந்த தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாது.

இது அலி சப்ரிகும் நன்றாக தெரியும் தெரிந்தும் ஐ நா. வில் இருந்து கொண்டு இவ்வாறு அறிக்கை விடுவது நகைப்புக்குரியது. உள்நாட்டில் தீர்த்து கொள்ளதான் நாமும் விரும்பினோம்.

ஆனால் அது சரிவராது இவர்கள் ஒரு முயற்சியும் செய்யவில்லையே செய்திருந்தால் இப்பிரச்சினைக்கு சர்வதேச கோரிக்கை எழுந்திருக்காது. 

இவர்கள் இவ்வளவு காலமும் தேங்காய் துருவி கொண்டும், வெங்காயம் உறித்து கொண்டும் இருந்தார்களே தவிர ஒரு ஆணியும் பிடுங்க வில்லை எனவேதான் வெளிநாட்டு புலம்பெயந்தவர்களும், மனித அமைப்புகளும்,மனித உரிமை அமைப்புகளும் சர்வதேச விசாரணை கோருகின்றனர் அதில் தவறில்லை அலி சப்ரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாவின் ஜனாதிபதி சட்டத்தரணி. கொடுக்கும் கூலிக்கு மாறடிகின்றார்.