இலங்கை வந்தார் சொல்ஹெய்ம்

Admin
Oct 10,2022

ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சொல்ஹெய்ம் இன்று பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்தார்.

இந்தியன் ஏர்லைன்ஸ் ஏ.ஐ. 271 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு வருகை தந்த எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திக்க உள்ளார்.

நோர்வே நாட்டைச் சேர்ந்த இவர், 2002ஆம் ஆண்டு போரின் போது நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார்.

எரிக் சொல்ஹெய்ம் 2016 முதல் 2018 வரை ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.