"ஐ.நா மனித உரிமைப் பேரவையால் ஒன்றுமே செய்ய முடியாது"

Admin
Oct 10,2022

ஐ.நா மனித உரிமைப் பேரவையால் ஒன்றுமே செய்ய முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நாம் எல்லோரும் சர்வதேசத்தை நம்புகின்றோம்.நாட்டில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அவர்களிடமே தீர்வு உள்ளது.இந்த நிலையில் தான் இனப் படுகொலைக்கு தீர்வு கிடைக்கும் என ஐ.நா மனித உரிமை பேரவையை நம்பினோம்.

ஆனால் இலங்கை அரசை மீறி தமிழ் இனப் படுகொலைக்கு தீர்வை வழங்கும் என்ற நிலையில்,அல்லது இலங்கையை மீறி அவர்கள் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை.ஏன்னெறால் அங்கே நிறைவேற்றப்படும் தீர்மானம் தமக்கு அழுத்தமே எல்லை என துறை சார்ந்த அமைச்சர்கள் இறுமாப்பு பேசுகிறார்கள்.

ஆகவே தான் பொறுப்புக்கூறல் என்ற ஒன்றை நாம் வெளியே எடுத்து ,பாதுகாப்புச் சபை ஊடாக சர்வேதேச குற்றவியல் நீதி மன்றுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.