சென்னை - பலாலி விமான சேவை அடுத்தவாரம் ஆரம்பம்?

Admin
Oct 10,2022

சென்னைக்கும் பலாலிக்கும் இடையிலான விமான சேவை மூன்று வருடங்களுக்கு பின்னர் அடுத்த வார தொடக்கத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது என தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைக் கட்டணம் கொழும்பு மற்றும் சென்னைக்கு இடையிலான விமானக் கட்டணங்களை விட கணிசமான அளவில் குறைவாக இருக்கும் என விமான சேவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது மற்றும் குறைவான விமான சேவைக் கட்டணங்கள் வடக்கு மக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ். பாதுகாப்பு படைத் தளபதி சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.