காலி முகத்திடலில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றநிலை

Admin
Oct 09,2022

கொழும்பு, காலி முகத்திடலில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றநிலை இன்று மாலை ஏற்பட்டது.
 

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்த 9 பேரை நினைவு கூர்வதற்காக காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் மீண்டும் கூடிய நிலையிலேயே இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால், அங்கு  அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
அத்துடன் போராட்டம் நடத்தும் இடத்திலிருந்து தாயையும் அவருடைய பிள்ளையையும் பொலிஸார் இழுத்துச் சென்றதனால், அவ்விடத்தில் பதற்றமான நிலைமையொன்றும்  ஏற்பட்டுள்ளது.