முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை விமர்சித்துள்ள அமெரிக்க தூதுவர்

Admin
Jul 24,2022

அமெரிக்க நீதிபதி ஒருவர் கடுமையான தொனியில் அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை விமர்சித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு அமெரிக்கா வோசிங்டனில் இலங்கை தூதரகத்துக்கான கட்டிடம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக, நடப்பு விலையிலும் பார்க்க அதிக விலையை இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து பணத்தை பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

தரவுகளின்படி அவர் 332,027 அமெரிக்க டொலர்களை பொய்க்கூறி இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும் அவர் இந்த மேலதிக பணத்தை, ஒரு வருடகாலத்துக்கு பின்னர் இலங்கை அரசாங்கத்துக்கு திருப்பியனுப்பினார்.
வழிப்பறி கொள்ளைக்கு ஒப்பான செயல்

இந்தநிலையில் அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள், இது வழிப்பறி கொள்ளைக்கு ஒப்பான செயல் என்றுகூறி வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு கடந்த புதன்கிழமை, விசாரணைக்கு வந்தபோது, பணத்தைதிருப்பியனுப்பியபோதும், இது இலங்கை மக்களிடம் இருந்து மேற்கொள்ளப்பட்ட திருட்டாகவே கருதப்படுகிறது.

அத்துடன் சக்திவாய்ந்த நாடு ஒன்றில் தலைநகரில் இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே 'நீங்கள் செய்தது கடுமையான துரோகம்'என்று நீதிபதி குறிப்பிட்டார்.

குறித்த பணத்தை இலங்கை அரசாங்கத்துக்கு திருப்பியனுப்பி, நட்டத்தை ஏற்படுத்தாவிட்டாலும், இரண்டு வருட நன்நடத்தை சோதனை காலத்தையும், 5000 டொலர்கள் அபராதத்தையும் விதித்தார்.