புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன சத்தியப்பிரமாணம்!

Admin
Jul 22,2022

இலங்கையின் 27 ஆவது பிரதமராக தினேஸ் குணவர்தன சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கொழும்பு – ஃப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

சிரேஷ்ட அரசியல்வாதியான தினேஸ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளதுடன், பிரதமராக பதவியேற்பதற்கு முன்னதாக சபை முதல்வராகவும் செயற்பட்டார்.

அண்மையில், ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனு கோரப்பட்டபோது, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரை தினேஸ் குணவர்தனவே முன்மொழிந்திருந்தார்.

நேற்றைய தினம் இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.