இந்தியா பயணமாகிறார் ரணில்

Admin
Oct 07,2022

இலங்கையின் நிலைப்பாடு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கமளிக்க புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அவர் எப்போது இந்தியாவுக்கு செல்வார் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.

மேலும் இலங்கை மெதுவாக ஸ்திரத்தன்மையை அடைந்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளுக்கு இலங்கையில் பெரும்பான்மையானோர் ஆதரவளிப்பதாகவும் அதற்கு எதிராக சிலர் இருப்பதாகவும் தெரிவித்தார்.