மனிதர்கள் இல்லை – அனிமேஷன் காட்சிகள் இல்லை – பார்த்திபனின் அடுத்த புது முயற்சி?

Admin
Jul 22,2022

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் மனிதர்கள் இல்லாமல் விலங்குகளை மட்டும் வைத்து முழு நீள படம் ஒன்றை எடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

தமிழ் சினிமாவில் புதுவிதமான முயற்சிகளை கையாண்டு தனது படைப்புகளை ரசிகர்களுக்கு விருந்தாக படைப்பவர் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன். இவர் நடிப்பில் வெளியான படங்களும் சிறந்த பொழுதுபோக்கு படமாகவும் அமைந்திருக்கும். சில மாதங்களுக்கு முன்னர் இவர் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வித்தியாசமான முயற்சியில் வெளியான ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படம் நல்ல வெற்றியை பெற்றது.

இந்த படத்தில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்திருந்தார், படம் முழுக்க இவரது முகம் ஒன்று மட்டுமே திரையில் தெரியில், மற்றபடி மற்ற கதாபாத்திரங்களின் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும். ஒரு நபரே படத்தை இயக்கி, நடித்து, தயாரித்து இருந்ததால் இந்த படத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக படம் ஆசிய சாதனைகள் புத்தகம் மற்றும் இந்திய சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்று சாதனை படைத்தது. இந்தியா சினிமாவில் இது ஒரு சிறப்பான முயற்சி என்று பலரும் இந்த படத்தை பாராட்டினார்கள்.

அதனைத்தொடர்ந்து பார்த்திபன் அடுத்த சூப்பர் முயற்சியில் சில தினங்களுக்கு முன்னர் வெளியான படம் ‘இரவின் நிழல்’. இப்படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாகியுள்ளது, இந்த படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருக்கிறது. உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் இந்த படம் கிடையாது, ஏற்கனவே ஈரானிய படமான பிஷ் அண்ட் கேட் இதே முறையில் எடுக்கப்பட்டு இருக்கிறது என்று சில கருத்துகளும் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் பார்த்திபனின் முயற்சியில் வெளியாகியுள்ள இந்த இரவின் நிழல் படத்திற்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்து இருக்கிறார். படத்தை பற்றி சில சர்ச்சை கருத்துக்கள் பேசப்பட்டு வந்தாலும் இப்படத்தை ரசிகர்களும், பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பார்த்திபன் தனது அடுத்த படத்தில் எந்த மாதிரியான வித்தையை கையாள போகிறார் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் லேட்டஸ்ட் ஆக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி பார்த்திபன் அவரது அடுத்த படத்தில் மனிதர்களை வைத்து படம் எடுக்கப்போவது இல்லையாம், மாறாக விலங்குகளை மட்டுமே வைத்து ஒரு முழு நீள படமாக உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் அனிமேஷன் காட்சிகள் எதுவும் இடம்பெறாத வகையில் பார்த்திபன் படத்தை உருவாக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.