"மனித உரிமைகள் பேரவை இலங்கையின் உள்விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடுகிறது"

Admin
Oct 05,2022

ஐ.நா மனித உரிமைகள் பேரவை, இலங்கையின் உள்விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடுவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார குற்றங்களுக்கு யாரேனும் பொறுப்புக் கூறினால் அவர்கள் மீது நாட்டின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார குற்றங்கள் என்ற சொல்லை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், இலங்கைக்கு இப்போது தேவைப்படுவது பொருளாதார சீர்திருத்தங்கள் மாத்திரமே என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து இலங்கைக்கு கல்வி கற்பிப்பதற்கான நிபுணத்துவம் ஐக்கிய நாடுகளின் உரிமைகள் பேரவைக்கு இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

எனினும், பொருளாதார சீர்திருத்தங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பனவே என்று அவர் தெரிவித்துள்ளார்.