இலங்கை மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் அவதானிக்கும் பிரித்தானியா!

Admin
Oct 05,2022

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக பிரித்தானியா தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானம் செலுத்தும் என்று பிரித்தானியாவின் ராஜாங்க அமைச்சர் ஜீஸ் நோர்மன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா, இலங்கையின் முக்கிய படைத்தரப்பு அதிகாரிகளுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கண்காணிப்பில் வைத்திருப்பதற்கான சிறந்த பொறிமுறை பிரித்தானியாவிடம் உள்ளது.

தொடர்ந்தும் இலங்கை தமது பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.