திலீபனின் தியாகம் நமக்கு சொல்லும் செய்தி என்ன? - வி.உருத்திரகுமாரன்

Admin
Oct 04,2022

மூன்று முக்கிய செய்திகளை லெப் கேணல் திலீபனின் தியாகம் நமக்கு சொல்லி நிற்கின்றதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், தியாகதீபம் திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளில் பதிவிட்ட ருவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மக்களை நம்புங்கள்; முழு அர்ப்பணிப்புடன் தலைமை தாங்கும் தலைவனொருவனின் பின்னால் மக்கள் அணிதிரள்வார்கள்.

போராட்டத்தின் எவ்வடிவமென்றாலும், அதன் உச்ச வடிவம் செயற்படுத்தப்பட வேண்டும்.

போராட்டத்தை யாரிடமும், அவை பன்னாட்டு நிறுவனங்கள் எதுவென்றாலும் அல்லது சர்வதேச சக்திகளென்றாலும் கையளிக்காதிர்கள் – தமிழரின் தலைவிதி தமிழரின் கையில், ஆகிய மூன்று செய்திகளை தமிழீழத் தேசிய விடுதலைப்பரப்புக்கு சொல்லுணர்த்தி நிற்கின்றதென பிரதமர் வி.உருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

யாரைச் சாடுவது? நாடுகள் மற்றும் நாடற்ற தேசங்களுக்கிடையிலான வலுச் சமமின்மையா? அல்லது சர்வதேச மனித உரிமைகள் பொறிமுறையின் காத்திரமின்மையா? என கேள்விகளை எழுப்பியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன தேசிய விடுதலைப் போராட்டத்தில் பெண்களை உள்வாங்குவதிலும், பெண்களின் சமத்துவத்தை உறுதியாக நம்பிய முன்னோடியாக தியாகதீபம் திலீபனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசாங்கம் அளித்த கோரிக்கைகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுப்பதற்காக, பின்வரும் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அஹிம்சையை தனதாயுதமாகப் பயன்படுத்தி ஒரு துளி நீரும் அருந்தாமல் சாகும் வரை 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து தன்னுயிரை தமிழீழ விடுதலைக்கு அர்பணித்த பெருமகன் தியாகதீபம் திலீபன்.

தொடரும் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்த வேண்டும்.

தமிழ் பகுதிகளிலிருந்து சிங்கள இராணுவ முகாம்கள் வாபஸ் பெறப்பட வேண்டும்.

தமிழ்ப் பகுதிகளில் சிங்களவர்களால் நிர்வகிக்கப்படும் பொலிஸ் நிலையங்கள் அமைப்பதை நிறுத்த வேண்டும்.

தமிழ் தாயகத்தில் இடைக்கால அரசாங்கமொன்று அமைக்கப்படும் வரையில் அனைத்து புனர்வாழ்வுப் பணிகளையும் இடைநிறுத்தல்.

என்பதில் நான் உறுதியாய் இருக்கிறேன். தேசத்துக்கான எனது தேசியக் கடமையை நான் நிறைவேற்றுகின்றேன் என்பது எனக்கு பூரண திருப்தியையும் மனநிறைவையும் அளிக்கின்றது