புதிய பிரேரணை குறித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடும் அதிருப்தி!

Admin
Oct 02,2022

இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

தமக்கு மிகுந்த ஏமாற்றமளித்திருக்கும் இந்தப் பிரேணை பூகோள அரசியலுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படுவதாகவும் அதன் செயலாளர் லீலாதேவி குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்து வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் 6 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு வரவிருக்கும் நிலையில் புதிய பிரேரணை குறித்து லீலாதேவி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு தாம் நீண்டகாலமாக வலியுறுத்திவருகின்ற போதிலும் அது பிரேரணையில் உள்ளடக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.