19ஐ மீண்டும் கொண்டு வாருங்கள் என முன்னாள் சபாநாயகர் வலியுறுத்து

Admin
Sep 26,2022

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமுல்படுத்த வேண்டுமென சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது வாக்குறுதியளித்தபடி 19வது திருத்தச் சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளை உள்ளீர்க்குமாறும் அவர் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

சிலாபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய கரு ஜயசூரிய, மக்களின் தலையீடு இன்றி மேற்கொள்ளப்பட்ட 20ஆவது திருத்ததினால் நாடு அழிவடைந்துவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அனைத்து சமூகங்களும் அச்சமின்றி வாழக்கூடிய வகையில் ஆட்சியமைக்க வேண்டும் என அதிகாரத்தில் உள்ளவர்களிடம் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் முன்னதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.