பதில் அமைச்சர்களை நியமித்து ஜப்பான் சென்றார் ஜனாதிபதி

Admin
Sep 26,2022

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபேயின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக அவர் அங்குச் செல்கிறார்.


ஜப்பானின் விஜயத்தை நிறைவு செய்ததன் பின்னர் அவர் பிலிப்பைன்ஸ்சுக்கான விஜயத்தை மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அவர் வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவர் வகிக்கும் நிதி, பொருளாதார கொள்கைகள் அமைச்சுகளுக்குப் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.