தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது-நாமல்

Admin
Sep 26,2022

தேசிய பாதுகாப்பு என்பது நாட்டு மக்களின் பாதுகாப்பாகும். அதனை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்குக் காணப்படுகிறது எனவேதான் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன என நாடடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை கலவரத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த எவரேனும் முயற்சிப்பார்களாயின் அந்த முயற்சி ஒருபோதும் வெற்றியளிக்காது எனவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.