அமெரிக்க இராஜதந்திரியுடன் ஜனாதிபதி சந்திப்பு

Admin
Sep 26,2022

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கு இன்று விஜயம் செய்த அமெரிக்க இராஜதந்திரி  சின்டி மெக்கெய்ன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளின் தாக்கம் மற்றும் அவசர மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து செயற்படும் வழிகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதாக இலங்கைக்கான அமெரிக்க தூதவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய முகவரகத்துக்கான ஐக்கிய அமெரிக்க நிரந்த வதிவிட பிரதிநிதி சின்டி மெக்கெயின் 
எதிர்வரும் 28 ஆம் திகதி வரை  நாட்டில் தங்கியிருந்து பல உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.