அதியுயர் பாதுகாப்பு வலயங்கள்: இன்று முக்கிய சந்திப்பு

Admin
Sep 26,2022

கொழும்பில் பல பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று  (26) கூடவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் கடந்த வெள்ளிக்கிழமை (23) கொழும்பில் பல பகுதிகள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டன.
 
இதனையடுத்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் உட்பட பல தரப்புகள் ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.