அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்த அலி சப்ரி!

Admin
Sep 23,2022

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி கலாநிதி ஜில் பைடன் ஆகியோரை சந்தித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வின் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77வது அமர்வில், இலங்கையின் அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை முன்வைக்க உள்ளார்.