வல்வெட்டித்துறையில் ஒன்றுகூடிய மக்கள்; சிரமதானம் முன்னெடுப்பு

Admin
Sep 20,2022

வல்வெட்டித்துறை நகரசபையினரால் சிவப்பு அறிவித்தல் எச்சரிக்கை காட்சிப்படுத்தப்பட்டதை அடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் காணியை பொதுமக்கள் தாமாக முன்வந்து சிரமதானம் செய்துள்ளனர்.

இதுகுறித்து தெரியவருகையில் வடமராட்சி – வல்வெட்டித்துறை பகுதயில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை – பிரபாகரன் அவர்களின் வீடு அமைந்திருந்த காணி புதர்மண்டிப்போய் இருந்துள்ளது.

சுகாதார காரணங்களை முன்னிட்டு வல்வெட்வெட்டித்துறை நகரசபையினரால் குறித்த காணிக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த காணியை துப்பரவு செய்யாதுவிடில் நகரசபை பொறுப்பேற்கும் என அவ் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் ஒன்று சேர்ந்து குறித்த காணியை சிரமதானம் செய்து சுத்தப்படுத்தியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் காணியை தாமாக முன்வந்து துப்பரவு செய்த பொதுமக்களுக்கு அவ்விடத்தால் சென்ற புலம்பெயர் உறவுகள் குளிர்பானங்களை வழங்கியிருந்தனர்