15 ஆயிரம் பேர் படையினரிடம் சரணடைவு; ஜெனீவாவில் ஒலித்த குரல்

Admin
Sep 20,2022

நானும் எனது கணவரும் இரண்டரை வயது மகனும் வன்னி இறுதி யுத்ததத்தின்போது 17.05.2009 அன்று வட்டுவாகல் ஊடாக ஓமந்தைக்கு வந்து கொண்டிருந்தவேளை எனது கணவர் சரணடைந்தார்.

இதன்போது எனக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டிருந்தது.வட்டுவாகல் வருதற்கு ஒரு மணிநேரம் முன்புதான் நான் காயமடைந்தேன். இதன்போது வயிற்றில் செல்லுடன் தான் நான் வந்தேன்.

இதன்போது எனது கணவரைப்போல சுமார் 15 ஆயிரம் பேர் படையினரிடம் சரணடைந்திருந்தனர்.

இவ்வாறு அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை அமர்வில் பங்கேற்பதற்காக வருகை தந்தவேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.