ரணிலை நேர்காணல் செய்தவரை பின்தொடரும் பொலிஸார்
Admin
Sep 17,2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேர்காணல் செய்து 24 மணித்தியாலத்தின் பின்னர் பொலிஸ் வாகனமொன்று தன்னை பின்தொடர்ந்ததாக சர்வதேச செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏ.பி.சியின் செய்தியாளர் அவனி டயஸ் தனது டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://
The day after our interview with Sri Lanka's President, we were searched by police. Twice.
Watch what happened
And watch our full story on Foreign Correspondent here: https://t.co/Ri3LWxyRok https://t.co/vg5XFD5kqy
— Avani Dias (@AvaniDias) September 15, 2022
நானும் எனது ஊடக குழுவினரும் இந்த வருட ஆரம்பம் முதல் போராட்டங்கள் குறித்த செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளோம், நாங்கள் ஜனாதிபதியை பேட்டி கண்டோம். அது முடிவடைந்து 24 மணி நேரத்திற்குள் இரண்டு தடவைகள் பொலிஸார் எங்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தினர். நாங்கள் எதையோ மறைத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.