சிறப்புக்-கட்டுரைகள்
தமிழ் பத்திரிகைகள்
சினிமா செய்திகள்
திரைப்படங்கள் & TV நிகழ்ச்சிகள்
ஈஸ்டர் குண்டுவெடிப்பு - முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சந்தேக நபராக அறிவிப்பு
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டின் ஈஸ்டர் நாள் கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 11 இந்தியர்கள் உள்பட 270 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த குண்டுவெடிப்பு உலகம் முழுவதும் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு வழக்கில் இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவை சந்தேக நபராக இலங்கை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இலங்கையில் இதுபோன்ற தாக்குதல் நடைபெறவுள்ளதாக தாக்குதலுக்கு முன்னதாகவே அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.
உளவுத்துறையின் இந்த எச்சரிக்கை அறிக்கைகளை மைத்ரிபால சிறிசேனா புறக்கணித்ததாக கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்த வழக்கில் அக்டோபர் 14-ம் திகதி மைத்ரிபால சிறிசேனா நீதிமன்றில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.