இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு நாளாந்த உணவுக்கு 2,500 ரூபா செலவு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Admin
Sep 17,2022

இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு நாளாந்த உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக குறைந்தது 2,500 ரூபா செலவாகுவதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் தொழிற்சங்க ஒன்றியம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

உணவு தேவைக்கான நாளாந்த செலவு
ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு உணவு தேவைக்காக நாளாந்தம் 4,000 ரூபா செலவாகுவதாக அந்த ஒன்றியத்தின் தலைவர் சமல் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.

5 வயதுக்கு குறைந்த சிறுவர்களில் 27.000 பேர் கடும் போசாக்கு குறைப்பாட்டுடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.