"மாவீரர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்திய அரசியல் கட்சிகளை கண்டிக்கின்றோம்"

Admin
Sep 16,2022

தமிழ் மக்களுக்குகாக அஹிம்சை ரீதியாகப் போராடி உயிரை நீர்த்த தியாக தீபம் திலீபனின் தியாகங்களை கொச்சைப்படுத்திய அரசியல் கட்சிகளை கண்டிக்கின்றோம் என பொதுத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான அமைப்பின் முக்கியஸ்தர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து,உண்ணாவிரதம் இருந்து உயர் நீர்த்தவர் தியாக தீபம் திலீபன்.அவரின் கோரிக்கைகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.ஆனால் அவரின் நினைவேந்தலில் கட்சி அரசியல் பரப்பிய நபர்களை நாம் கண்டிக்கின்றோம்.

வேறு எந்த இடத்திலும் நடைபெறாது புனிதமான மரணம் தான் தியாகி திலீபனின் மரணம்.ஆகவே அவரின் வழிகளை நாம் பின்பற்றி நடக்க வேண்டும்.இந்த நினைவேந்தல்களை மக்கள் குழுவாக இணைந்து நடாத்த வேண்டும்.அப்போது தான் மாவீரர்களின் தியாகம் பலன் உள்ளதாக அமையும்.இல்லையென்றால் அவர்களின் தியாகங்கள் வீணாகி விடும்.என்றார்.