இலங்கைக்கு எதிராக புதிய பிரேணை வரைவு

Admin
Sep 15,2022

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில், இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை வரைவு, இந்த மாத இறுதியில் நிறைவேற்றப்படலாம் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மொண்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகளின் இணை அனுசரணையில் இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு பல நாடுகளின் ஆதரவு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் மனித உரிமைகள் பலவீனமடைவதற்கு காரணமான பொருளாதாரக் குற்றங்களைச் செய்த அரச உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்த பிரேரணை வரைவு பரிந்துரைப்பதாகவும் தெரியவருகிறது.