பயங்கரவாதிகளை விடுவிக்க முடியாது; ஊர்திப் பேரணிக்கு எதிர்ப்பு வெளியிட்ட பிரசன்ன

Admin
Sep 14,2022

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்கிவிட்டு நாட்டைத் துண்டாட நினைக்கும் பயங்கரவாதிகளுக்குத் தீனிபோட முடியாது. சிறைச்சாலைகளிலுள்ள பயங்கரவாதிகளை விடுவிக்கவும் முடியாது. எனவே, பயங்கரவாதிகளையும் வன்முறையாளர்களையும் அடக்கப் பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவுமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக வடக்கிலிருந்து ஆரம்பமாகியுள்ள கையெழுத்துப் போராட்டத்துக்கு எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஜெனிவா மாநாடு ஆரம்பமாகியுள்ள நிலையில் நாடு முழுவதிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ள கருத்து பலத்தை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு எதிரான ஜெனிவா நிகழ்ச்சி நிரலின் பிரகாரம்தான் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இது தொடர்பில் அரசு மிகவும் அவதானத்துடன் செயற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.