அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது?

Admin
Sep 14,2022

பல சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டாலும் தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுக்கப்படவில்லை என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை.இது எமக்கு ஒரு ஏமாற்றம்.46 கைதிகள் நீண்டகாலம் சிறையில் உள்ளனர்.அவர்கள் விடுக்கப்படுவார்என்று காத்திருந்த வேளை வெறும் ஏமாற்றமே மிஞ்சியது.ரஞ்சன் ராமநாயக்க விடுவிக்கப்பட்ட போதும் நாம் காத்திருந்தோம்.

அப்போதும், தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை.கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்ற ஏக்கத்தில் பலர் உறவுகள் எம்முடன் தொடர்பு கொண்டு கேட்டார்கள்.நாம் வாயடைத்து போய் நின்றோம்.ஆகவே மக்கள் பிரதிநிதிகள் இந்த அரசியல் கைதிகளின் விடுதலையில் அழுத்தங்களை கொடுத்து மக்களோடு மக்களாக நிற்கவேண்டும் என்றார்.