தமிழர்களை பிரித்த ரணில்; தானிஷ் அலி

Admin
Sep 13,2022

2002 இல் சமாதான பேச்சுவார்த்தை என்ற ஒன்றை கொண்டு வந்து தமிழர்களை பிரித்ததே ரணில் ராஜபக்ச தான் என காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரான தானிஷ் அலி தெரிவித்தார்.

இணையத்தள செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 

தமிழர்களை பிரித்ததே ரணில் தான் என்பது கூட தெரியாமல் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். அது தமிழர்களின் பிழை.

யுத்தம் நடந்த காலத்தில் ரணில் இராணுவத்தினரை சென்று பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை.

ஏனெனில் தமிழர்கள் மத்தியில் தான் யுத்தத்தை விரும்பவில்லை என்பதை காட்டிக் கொள்ள வேண்டும் என்பதே நோக்கம்.

இப்பொழுது தமிழர்களை விட்டு விட்டார். தற்போது அவருக்கு தான் சிங்கள மக்களுடன் இருப்பதாக காட்டிக் கொள்ள விரும்புகிறார்.

இலங்கையை ஏன் பிரிக்க வேண்டும்?. நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.