ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவு வழங்கிய சீனா

Admin
Sep 13,2022

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சென் சூ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், 

நல்லிணக்கத்தை பாதுகாக்க இலங்கை மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை சீனா பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சமூக ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும், இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இலங்கைக்கு பலமான ஆதரவு வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சென் சூ மேலும் தெரிவித்துள்ளார்.