இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்!

Admin
Sep 13,2022

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து ஜெனீவாவில் இலங்கையர்கள் சிலர் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் போராட்டக்காரர்கள் மீது இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டங்களின்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிக்குமாறு இதன்போது அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.