13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும்: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்து

Admin
Sep 13,2022

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும், மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் பேசிய இந்திய பிரதிநிதி, பொருளாதார மீட்சிக்கு இந்த அதிகாரப் பகிர்வும் இலங்கை இனப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வும் தேவை என வலியுறுத்தினார்.

இதேவேளை பொறுப்புக்கூறல், உண்மை மற்றும் நீதிக்காக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்த போதிலும், மிகக் குறைவான முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து கவலை வெளியிட்டுள்ளது.