தலைமுறைகளை தாண்டிய ரசனை - நடிகர் கமல் நெகிழ்ச்சி

Admin
Sep 10,2022

 மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். 

இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'விக்ரம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, என பல மொழிகளில் அண்மையில் வெளியாகி ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. 

'விக்ரம்' திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகி சாதனை படைத்திருந்தாலும் தற்போது வரை சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், 'விக்ரம்' திரைப்படம் 100-வது நாளை எட்டியுள்ளது. 

இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், "ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் திரைப்படம் 100-வது நாளை எட்டியிருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன். தலைமுறைகளை தாண்டி என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாக தழுவிக்கொள்கிறேன். 

விக்ரம் வெற்றிக்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள். தம்பி லோகேஷுக்கு எனது அன்பும் வாழ்த்தும்." என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.