இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும்; தமிழ் புலம்பெயர் அமைப்புகள் வலியுறுத்து

Admin
Sep 10,2022

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்று பிரித்தானியாவில் உள்ள தமிழ் புலம்பெயர் அமைப்புகள் ஒன்றிணைந்து வலியுறுத்தியுள்ளன.

இதுதொடர்பாக பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ்ட்ரசுக்கு அந்த அமைப்புகள் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைத் தொடர்பான பிரேரணைகளை வழிநடத்துகின்ற இணைத்தலைமை நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்றாகும்.

இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளிட்ட பல்வேறு அறிக்கையாளர்களால் பல அறிக்கைகள் வெளியாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிறுத்த பிரித்தானியா பணியாற்ற வேண்டும் என்று தமிழ் புலம்பெயர் அமைப்புகள் பிரித்தானிய பிரதமரை வலியுறுத்தியுள்ளன.