பிரித்தானிய மகாராணிக்கு கணிதம் கற்பித்த அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம்

Admin
Sep 10,2022

முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர், அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் மகாராணிக்கு சிறு வயதில், கணிதம் கற்பித்ததாகவும் மகாராணி ஒரு முறை கொழும்பு வந்திருந்த சமயம் தனது ஆசிரியரை சந்தித்த போது, கையுறையை கழட்டி விட்டு, கை குலுக்கியதாகவும் சொல்வார்கள்.

யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த செல்லப்பா, மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தவர் எஸ். சுந்தரலிங்கம். யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி, கொழும்பு புனித யோசப் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்ற சுந்தரலிங்கம், 1914 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் சிறப்புப் பட்டம் பெற்றார். பின்னர் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேர்லியல் கல்லூரியில் கணிதத்தில் பட்டப் பின்படிப்பும் பயின்றார்.

1920 ஆம் ஆண்டில் இங்கிலாந்து பாரிஸ்டர்களுக்கான பார் கழகத்தில் சேர்ந்து வழக்கறிஞராகத் தேர்ந்து இலங்கையில் பணியாற்றினார். கொழும்பு ஆனந்தா கல்லூரி அதிபராகவும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணிததுறைத் தலைவராகவும் பின்னர் பணியாற்றினார்.