நடிகை தமித்தா அபேரத்ன விளக்கமறியலில்

Admin
Sep 08,2022

போராட்ட செயற்பாட்டாளரும் நடிகையுமான தமித்தா அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரை இன்று (08) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 14 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம், ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்து அதன் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று (07) பத்தரமுல்லை தியத்த உயனேயில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட போது தமித்தா அபேரத்ன, கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.