'இது ஒரு சிங்கள பௌத்த நாடு என்பதனை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்'

Admin
Sep 08,2022

இது ஒரு சிங்கள பௌத்த நாடு என்பதனை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இதன்படி இங்கு பழைய தூபிகளை பராமரிக்க எவருடைய அனுமதியையும் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என்றும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை வேறு நாட்டில் என்றால் பெரும்பான்மையான மதமொன்றுக்கு வேறு மதத்தை சேர்ந்த ஒருவர் இடையூறு ஏற்படுத்தினால் அதற்கு மறுநாள் அவர் காணாமல் போயிருப்பார் என்றும் அவர் குறப்பிட்டுள்ளார்.

அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் மக்களையும், அரந்தலாவ பிக்குகள் உள்ளிட்டவர்களை கொலை செய்யும் போதும், கொழும்பில் இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் நடந்தன. பௌத்தர்கள் எந்தத் தடைகளையும் ஏற்படுத்தவில்லை.அதனால் நீங்கள் செய்யும் வேலையால் அனைத்து தமிழ் மக்களுக்கும் அவமானத்தையே கொண்டு வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.